உலக கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!
உலக கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் மே30ம் தேதி நடைபெற உள்ளது.50 ஓவர்கள் நிறைந்த இந்த போட்டிக்காக அனைத்து அணிகளும் தங்களது கிரிக்கெட் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது மனைவி மற்றும் காதலியை தங்களுடன் அழைத்துச் செல்ல தடை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நீண்ட நாள் தொடர்களுக்கு தங்களது மனைவி மற்றும் காதலியை தங்களுடன் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர. மேலும் அவர்கள் தாங்கள் செல்லும் சொகுசு பேருந்திலேயே அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஆனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் முதல் 20 நாட்கள் தங்களது மனைவி, காதலி மற்றும் குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை விதித்து பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 20 நாட்களுக்குப் பிறகு அழைத்து செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் கிரிக்கெட் வீரர்கள் செல்லும் பேருந்தில் அவர்களுடன் இணைந்து செல்ல கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.