விளையாட்டு

வெளிப்புறத்தில் பயிற்சியை துவங்கிய இந்திய இளம்வீரர்! கடும் அதிருப்தியில் பிசிசிஐ!

Summary:

Bcci angry on indian player shathul thakoor

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மேலும் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மே 31 வரை நான்காவது கட்டமாக நீடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கால் ஐபிஎல் போட்டிகள்,  சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து  பல கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீடுகளிலேயே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீரரான ‌ஷர்துல் தாகூர் மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் நேற்று பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து வெளிப்புறப் பகுதிகளில் பயிற்சியில் ஈடுபட்ட முதல் கிரிக்கெட் வீரர் இவரானார்.

ஷர்துல் தாகூர் பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் ஆவார். மேலும் மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில் ஷர்துல் தாகூர் அனுமதி பெறாமல், அவராகவே வெளிப்புறத்தில் பயிற்சி மேற்கொண்டதால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement