இந்தியா விளையாட்டு

தோல்வியிலிருந்து மீளாத வங்கதேசம்!. இந்திய அணிக்கு கொடுக்கும் டார்ச்சர்!.

Summary:

தோல்வியிலிருந்து மீளாத வங்கதேசம்!. இந்திய அணிக்கு கொடுக்கும் டார்ச்சர்!.


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையே அபுதாபியில் நடந்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றது.

அன்று நடந்த இறுதி போட்டியில், லிட்டன் தாஸ் பேட்டிங் செய்யும்போது இந்திய அணியின் குல்தீப் யாதவ் பந்து வீசியபோது, விக்கெட் கீப்பர் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு லிட்டன் தாஸ் அவுட் ஆகினார்.

அப்போது மைதானத்திற்குள் இருக்கும்இரண்டு  நடுவருக்கும்  குழப்பம் வந்ததால், முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.

அப்போது உருவான சர்ச்சை தான் வங்கதேச ரசிகர்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. இன்னும் இந்திய அணியுடனான தோல்வியில் இருந்து வெளியே வராத அவர்கள், ஆசிய கோப்பைக்கு கேப்டனாக ரோஹித் செயல்பட்ட போதிலும், இன்று விராட் கோலியின் இணையதளத்தை முடக்கியுள்ளனர்.

அதில், நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இணையதளம் மீண்டும் மீண்டும் ஹேக் செய்யப்படும்.  விளையாட்டில் அனைத்து அணிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என கூறியிருந்தனர்.


Advertisement