புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ராமர் கோவில் திறப்பு விழா: சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு.!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, ஜனவரி 22ம் தேதி கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக பக்தர்கள் தற்போதில் இருந்து சிறப்பு இரயில்கள் மூலமாக அயோத்தி சென்றுள்ளனர்.
அயோத்தி நகரமும் சர்வதேச விமான நிலையம், சர்வதேச தரத்துடன் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட இரயில் நிலையம் என பல ஆயிரம் கோடிகள் செலவில் புத்துயிர் பெற்றுள்ளது.
கோவில் கும்பாவிஷேகத்திற்கு நேரில் வர இந்திய அளவிலான பிரபலங்கள், அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு நேரில் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.