இந்தியா விளையாட்டு

வெறியாட்டம் ஆடிய வார்னர்.! திகைத்துப்போன இலங்கை அணி.! தரமான சம்பவம்.!

Summary:

வெறியாட்டம் ஆடிய வார்னர்.! திகைத்துப்போன இலங்கை அணி.! தரமான சம்பவம்.!

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடியது. இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக  குசால் பெரேராவும் 35 ரன்களும், அசல்ன்கா 35 ரன்களும், ராஜபாக்ச 33 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக வார்னர் மற்றும் பின்ச் களமிறங்கினர். பின்ச் 37 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடிய வார்னர் 31 பந்துகளில் அரை சதம் விளாசி 65 ரன்களில் அவுட்டானார். இறுதியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 17 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.


Advertisement