ஆஸ்திரேலியாவை ஆரம்பத்திலேயே அலறவிட்ட நியூசிலாந்து! முதலிடம் யாருக்கு?

ஆஸ்திரேலியாவை ஆரம்பத்திலேயே அலறவிட்ட நியூசிலாந்து! முதலிடம் யாருக்கு?



australia lost 3 wickets in 12 overs against newzland

இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அதாவது ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலியா அணி இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.

நியூசிலாந்து அணியில் துவக்க பந்து வீச்சாளர்களான போல்ட் மற்றும் கிராண்ட்ஹோம் ஆரம்பத்திலேயே மிகச் சிறப்பாக பந்து வீசினர். முதல் இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் கூட எடுக்க வில்லை. 

wc2019

பின்னர் போல்ட் வீசிய 5-வது ஓவரில் ஆரோன் பின்ச் எல்பிடபுல்யூ ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து பெர்குசன் வீசிய 10 மற்றும் 12 வது ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். 50 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி முக்கியமான 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டது. பின்னர் சற்று நிலைத்து ஆடிய ஸ்டானிஸ் 20 ஆவது ஓவரில் நீசம் பந்தில் ஆட்டமிழந்தார்.

wc2019

தற்பொழுது ஆஸ்திரேலிய அணியின் கவாஜா மற்றும் மேக்ஸ்வெல் 5-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 81 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை எந்த அளவிற்கு சமாளித்து எவ்வளவு ரன்களை குவிக்கும் என்பதை அடுத்த அப்டேட்டில் பார்க்கலாம்.