இந்திய அணியின் சாதனை வெற்றி சந்தேகம்! நிலைகுலையும் இந்திய பந்துவீச்சாளர்கள்Australia defends stronger in last test

சிட்னியில் நடைபெற்று வரும் இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மூன்றாவது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. 

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்று செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து நேற்று டிக்ளேர் செய்தது. புஜாரா 193, பண்ட் 159, ஜடேஜா 81, விஹாரி 77 ரன்கள் எடுத்தனர். பின்னர் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 24 ரன்கள் எடுத்து இருந்தது. 

4th test

இந்நிலையில் இன்று துவங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர்கள் தங்களது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் இவர்களது விக்கெட்டை பெறமுடியவில்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 22 ஆவது ஓவரில் கவாஜா 27 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

4th test

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லாபஸ்ஜெய்ன் மார்கஸ் ஹாரிசுடன் இணைந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிவரும் மார்க்கஸ் ஹாரிஸ் தனது அரைசதத்தை கடந்தார். 22 ஆவது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணியால் 40 ஓவர்கள் முடிவுற்ற போதிலும் அடுத்த விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் நிலைகுலைந்து காணப்படுகின்றனர்.

4th test

இந்நிலையில் மூன்றாவது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 122 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரிஸ் 77 ரன்களுடனும் லாபஸ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இவர்கள் இதேபோல் நங்கூரமாக நின்று ஆடினாள் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறியாகும். ஒருவேளை ஆட்டம் டிராவில் முடிந்தால் இந்திய அணிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே தொடரில் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுவிடும். மாறாக ஆஸ்திரேலியா வென்றால் தொடர் சமநிலை பெற்றுவிடும்.