புதிய சாதனையை படைக்கவிருக்கும் தமிழக வீரர் அஸ்வின்.!

புதிய சாதனையை படைக்கவிருக்கும் தமிழக வீரர் அஸ்வின்.!


Aswin will do new record

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த 34 வயதான இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்டிலும் சிறப்பாக ஆடினார். சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 2 டெஸ்டிலும் சேர்த்து அஸ்வின் 17 விக்கெட் வீழ்த்தினார். முதல் போட்டியில் 9 விக்கெட்டும், 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டும் கைப்பற்றினார். மேலும் 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் அஸ்வின்.

அஸ்வின் இதுவரை 76 டெஸ்டில் 394 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் 59 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. ஒரு டெஸ்டில் 140 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 29 முறை 5 விக்கெட்டுக்கு மேலும், 7 தடவை 10 விக்கெட்டுக்கு அதிகமாகவும் எடுத்துள்ளார்.

aswin

400 விக்கெட் என்ற சாதனையை பதிவு செய்ய இன்னும் அவருக்கு 6 விக்கெட் தேவை. இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் பகல்-இரவாக நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 400 விக்கெட்டை கைப்பற்றும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.