விளையாட்டு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி !

Summary:

asia cup 2018 india win by 8 wickets against pakistan

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று 5 போட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்றது.

முதல் போட்டியில் ஹாலந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும் அது இந்திய அணியினரை  பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது இந்த கடினமனா  சூழலில் இரண்டாவது போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது.

முதல் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவரும் இரண்டாவது போட்டியிலும் இடம்பெற்றிருந்தனர்.  இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.இதன் படி 
டாஸ் வின் செய்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் அந்த அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அஹமத். இதன் படி  தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள் அந்த அணியின் இமாம் உல் ஹக் மற்றும் பகார் சமான்  ஆனால் ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அது என்னவென்றால் ஆட்டம் துவங்கிய  முதல் 2.1 மற்றும் 4.1  ஓவர்கள் முறையே அந்த அணியின் துவக்க  மட்டையாளர்களை இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்குமார்  வீழ்த்தினார். அவர்கள் முறையே இமாம் உல் ஹக் 7 பந்துகளில் 2 ரன் ,  பாகார் சாமான்   9 
பந்துகளில் ( o ) என்ற கணக்கில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். தன்பிறகு களமிறங்கிய பாபர் அஸம்,  சோயிப் மாலிக் இருவரும் தங்களது  பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடி தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்கள்.

Image result for india vs pakistan live match in dubai in photo

இருந்தாலும் இந்திய அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சினால் நெருக்கடி கொடுத்தவண்ணம் இருந்தனர். முடிவில் பாபர் அசாமை 62 ( 47 )  இவரது விக்கெட்டை குலதீப் யாதவ் வீழ்த்தினார்  . பிறகு சோயிப் மாலிக்  67 ( 43 ) யாதவால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளீயேற்றப்பட்டார் ,இருவரும்  அரைசதம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்களது விக்கெட்டை இழந்தார் வெளியேறினார் . தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை இழந்த  வண்ணம் இருந்தார்கள் அதனால் பாகிஸ்தான் முடிவில் 162   ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய இந்திய அணியின் தரப்பில்  புவனேஷ்குமார்  3 விக்கெட்டுகளும் ,  கேதர் ஜாதவ் 3 விக்கெட்டுகளும், பூம்ரா 2 விக்கெட்களும் , குலதீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.  

163 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் தவான் நிலைத்து நின்று ஆடினர். 

Image result for india vs pakistan live match in dubai in photo

ஆட்டத்தின் 13.1வது ஓவரில் 52 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷிகெர் தவான் 46 ரன்களில் பஹீம் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

இதை அடுத்து கள்மிறங்கிய ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் விக்கெட்டுகள் எதுவும் போகாமல், இந்த இணை 164 ரன்களை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தது. 

அம்பத்தி ராயுடு 31 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 31 ரன்களுடன் கடைவரை ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியை சேர்ந்த அஷ்ரப் மற்றும் சதாப் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 


 


Advertisement