டெல்லி கேப்பிட்டஸ் அணியின் தலையில் விழுந்த பேரிடி.! முக்கிய வீரருக்கு கொரோனா.!



anrich nordia affected by corona

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த கொரோனா பாதிப்புக்கு இடையிலும் ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

ஐ.பி.எல் அணி நிர்வாகங்களும், வீரர்களும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றிவரும் நிலையிலும் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக தப்ப இயலவில்லை. ஏற்கெனவே ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு முன்பே டெல்லி வீரர் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது டெல்லி கேப்பிட்டஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 

anrich nordia

இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  நோர்டியா கடந்த சீசனில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். தற்போது அவர் ஆடமுடியாமல் போய் இருப்பது டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் கொரோனா பாதிப்புக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.