உலகசாதனை படைத்த மோர்கனை ஆப்கானிஸ்தான் வீரர் இப்படியா செய்வது? வைரலாகும் வீடியோ!

உலகசாதனை படைத்த மோர்கனை ஆப்கானிஸ்தான் வீரர் இப்படியா செய்வது? வைரலாகும் வீடியோ!


afghanistan player catch the england player

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 24 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பல சாதனைகளைப் படைத்து 397 ரன்கள் எடுத்தது.

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான்மோர்கன் 71 பந்துகளில் 148 ஓட்டங்கள் குவித்தார். இதில் 17 சிக்ஸர்கள் பறக்கவிட்டு உலகசாதனை படைத்தார். இந்நிலையில் ஆட்டத்தின் 32-வது ஓவரை நயீப்பின் வீசினர்.  அதனை எதிர்கொண்ட இயான்மோர்கன் அவரது உடலில் பந்தை வாங்கி ஒரு ஓட்டங்களை கடக்க முயன்றார். அப்போது தடுப்பாளர்கள் அருகில் வந்துவிட்டதால், மீண்டும் கிரிசிற்கு ஓடிவந்த மோர்கனை, பந்து வீச்சாளர் நயீப் அவரை கிரிசிற்குள் வரமுடியாத அளவிற்கு பின்புறம் இழுத்துள்ளார். 

ஆனால் மோர்கன் தன்னுடைய பேட்டை கீழே போட்ட போதும், தன்னுடைய காலால் கிரிசை அடைந்தார். இதனால் ரன் அவுட்டிலிருந்து தப்பினார். இதைத் தொடர்ந்து நயீப் இப்படி நடந்து கொண்டதற்கு மோர்கனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.