திடீரென மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்! பதறவைக்கும் வீடியோ!

திடீரென மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்! பதறவைக்கும் வீடியோ!


6-people-injured-in-lightning-attack-on-golf-stadium

அமெரிக்காவில் உள்ள கோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். ரசிகர்கள் பலரும் காயமடைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஈஸ்ட் லேக் கோல்ஃப் கிளப் மைதானத்தில் நேற்று பிஜிஏ டூர் சாம்பியன்ஷிப் கோல்ப்  போட்டியின் மூன்றாவது சுற்றின்போது மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு மறுநாள் போட்டி நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. 


 
மேலும், திடீரென புயல் காற்று வீசியதால், ரசிகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் திடீரென மரத்தின் மீது மின்னல் தாக்கியதில், அதன் கீழே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மின்னல் தாக்கிய வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.