ஓருநாள் தொடரை கைப்பற்ற போவது யார்!!.. கடைசி போட்டியில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதல்..!!

ஓருநாள் தொடரை கைப்பற்ற போவது யார்!!.. கடைசி போட்டியில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதல்..!!


3rd and final ODI match between India and Australia will be played at the Chepakkam stadium in Chennai today

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது.

மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

பகல்-இரவு மோதலாக நடைபெறும் இன்றைய போட்டியை வென்றால் மட்டுமே தொடரையும் வெல்ல முடியும், ஓருநாள் போட்டிக்கான ஐ.சி.சி தரவரிசையிலும் நம்பர்-1 இடத்தில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் பின் வருமாறு:-

 இந்தியா:- ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா:- மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர் அல்லது நாதன் எலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.