விளையாட்டு

எனது வாழ்க்கையில் சிறந்த தருணம் இதுதான்... சச்சின் டெண்டுல்கர் பரபரப்பு ட்வீட்.!

Summary:

2011-World-Cup-together-has-been-the-best-moment-

டோனியுடன் இணைந்து 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தல டோனியும், சுரேஷ் ரெய்னாவும் நேற்று மாலை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். நாடு முழுவதும் நேற்று 74 வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தல டோனியின் ஓய்வு செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில் டோனியின் ஓய்வு குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வரும் நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் டோனி குறித்த புகழாரம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் 2011 இல் நாம் உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சிறந்த தருணம். 

மேலும் இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் டெண்டுல்கர்  புகழாரம் சூட்டியுள்ளார்.மேலும் வாழ்க்கையின் 2வது அத்தியாயத்தில் சிறப்பாக செயல்பட தோனிக்கு தனது வாழ்த்துகள் எனவும் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்துகளை டோனிக்கு தெரிவித்துள்ளார்.


Advertisement