விளையாட்டு

இன்றைய நாள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத நாள்.! பாகிஸ்தானை வச்சு செய்த தரமான சம்பவம்.!

Summary:


2011 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான்


2011 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணியுடன் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 85 ரன்களை குவித்திருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் பாகிஸ்தான் 49.5 ஓவர்களுக்கு 239 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கும் முன்னேறியது. 

அந்த போட்டியில் ஆட்ட நாயகனாக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு இந்திய அணி இறுதி போட்டியில் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தியது. பாகிஸ்தானை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இன்றைய தினத்தை பலரும் நினைவு கூர்ந்துள்ளனர்.


Advertisement