தனது ரகசிய காதலனை, கணவரோடு சேர்ந்து கொன்ற பிரபல துணைநடிகை! வெளியான அதிரவைக்கும் காரணம்!

தனது ரகசிய காதலனை, கணவரோடு சேர்ந்து கொன்ற பிரபல துணைநடிகை! வெளியான அதிரவைக்கும் காரணம்!


supporting-actress-killed-illegal-love

சென்னை கொளத்தூரை  சேர்ந்தவர் தேவி.இவர் சீரியல் மற்றும் சினிமாக்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் துணை நடிகராக நடித்து வந்த ரவி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் அவரது கணவர் மற்றும் சகோதரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர் இது குறித்து தற்போது அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் அளித்துள்ளார். 

 அதில் அவர் நானும், ரவியும் ஒரு படத்தில் இணைந்து நடித்தபோது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவர் தான் இயக்குனராக முயற்சி செய்வதாகவும்,  அப்படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூடியநிலையில்  நான் அவருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தேன் 

Love

பின்னர் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் ரவி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். அதனை தொடர்ந்து அவர் எனது வீட்டிற்கு வருவது எனது கணவருக்கு தெரியவந்தது. அவர் என்னை கண்டித்த நிலையில் நானும் எனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவரை விட்டு விலகிச் சென்றேன். அதுமட்டுமின்றி வேறு பகுதிக்கும் மாறிவிட்டேன்.

இந்நிலையில் அவர் எனது தங்கை லட்சுமியின் வீட்டிற்கு சென்று தவறாக நடந்து கொண்டார். மேலும் அவரிடம் அத்துமீறி ஆபாசமாக பேசியுள்ளார். இதனை என் தங்கை என்னிடம் கூறிய நிலையில் நான் அங்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவி எனது தங்கை மகளை கொலை செய்ய முயற்சி செய்தார். இந்நிலையில் ஆத்திரமடைந்த நான் அங்கிருந்த கட்டையால் அவரைப் தாக்கினேன். மேலும் நான் தொடர்ந்து அடித்ததில் மதுபோதையில் இருந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தேவி  தெரிவித்துள்ளார். மேலும் தேவிக்கு துணையாக அவரது தங்கை மற்றும் கணவர் இருந்துள்ளனர்.