தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலிக்கு, காதலனால் நேர்ந்த கொடூர சம்பவம்

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை 3 நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சராயபாளையம் பகுதியை சேர்ந்த அமராவதியும், குணசேகரனும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களாக அமராவதியை காணவில்லை. அவரது பெற்றோர் தேடி வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் காதலன் குணசேகரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்ள அமராவதி வற்புறுத்தியதால் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அமராவதி உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசியதாகவும் காதலன் குணசேகரன் கூறியுள்ளார். இதையடுத்து காதலன் குணசேகரன் மற்றும் பள்ளி மாணவன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பள்ளி மாணவன் வேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் மற்ற மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.