இதுவே என் கடைசி வீடியோ! வாழ்வோ, சாவோ..! இனி காப்பாத்துங்கன்னு சொல்லமாட்டேன்.... எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு ஆதரவு... முதல்வர் விஜய்-சீமானால் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!!!
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பும் இடம்பெற்றது. இதையடுத்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள நிலையில், பதவியேற்ற பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
விஜயலட்சுமியின் அதிருப்தி
இந்தச் சந்திப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை விஜயலட்சுமி, ஸ்டாலின் மற்றும் வைகோவை விஜய் சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாக கூறினார். ஆனால், சீமானை சந்தித்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னம்மா நீங்க....இப்படி பண்றீங்களேம்மா! ஆடையை அணிந்து கொண்டே பாயல் ராஜ்புட் நடிகை செய்யுற வேலையை பாருங்க.... வைரல் வீடியோ!!!
தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக விமர்சித்தவர்களை பின்னர் ‘தம்பி’ என கட்டிப்பிடிப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “எனக்கு உதவி யாரும் செய்யவில்லை. ஆனால் எனக்கு துரோகம் செய்தவருக்கு ஆதரவு தெரிவிக்கப்படுகிறது” என்றும் குற்றம்சாட்டினார்.
‘இது என் கடைசி வீடியோ’
தொடர்ந்து பேசிய விஜயலட்சுமி, தமிழ்நாட்டில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்தார். “என்னுடைய எதிரியை ஒருவர் சந்தித்தால், அவரும் எனக்கு எதிரிதான்” என்றும் கூறினார்.
மேலும், “இதுவே எனது கடைசி வீடியோ. இனிமேல் வாழ்வோ, சாவோ கர்நாடகாவிலேயே பார்த்துக்கொள்கிறேன்” என்று உருக்கமாக பேசிய அவர், தமிழகத்தை விட்டு விலகுவதாகவும் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் விவாதம்
முதல்வர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், விஜயலட்சுமியின் இந்த வீடியோவும் வேகமாக பரவி வருகிறது. சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு அரசியல் நாகரிகத்தின் அடிப்படையிலான சந்திப்பை விமர்சிக்க வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விசில் அடித்து வெற்றியை கொண்டாடும் விஜய் குடும்பம்! வைரலாகும் வீடியோ!!!