அரசியல் தமிழகம்

விஜயகாந்த் சென்னை வந்த கையோடு கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று அழுகையுடன் செய்த செயல்!.

Summary:

விஜயகாந்த் சென்னை வந்த கையோடு கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று அழுகையுடன் செய்த செயல்!.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த 7-ஆம் தேதி காலமானார். அவரின் உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி இறந்தபோது நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இதனால் அவரால் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தமுடியவில்லை. இதனால் அமெரிக்காவில் இருந்தபடியே அழுதபடி இரங்கல் தெரிவித்தார்.

            

இந்நிலையில் இன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மெரினா சென்ற விஜயகாந்த், கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். 

முன்னதாக கருணாநிதி மறைவின்போது விஜயகாந்த் அழுதபடி அஞ்சலி செலுத்திய வீடியோ வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

உடலநலக்குறைவால் சிகிச்சை பெற்று நாடு திரும்பினாலும், வீட்டிற்கு செல்லாமல், வந்த கையோடு கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியது திமுக தொண்டர்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement