ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க பாதரச பாப்பா..! CM விஜய்க்கு வீடியோ மூலம் தரமான பதிலடி கொடுத்த திமுக...!!!
மதுராந்தகத்தில் இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். தனது வழக்கமான அரசியல் பாணியில் திமுக மற்றும் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அவர், அதிமுகவையும் கடுமையாக சாடினார். குறிப்பாக, ‘ஸ்வீட் அங்கிள்’ என்ற அவரது பேச்சு தற்போது அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.‘ஸ்வீட் அங்கிள்’ என ஸ்டாலினை குறிப்பிட்ட விஜய்கூட்டத்தில் பேசிய விஜய், “தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி... ஸ்டாலின் எனக்கு எப்போதும் ஸ்வீட் அங்கிள்தான்” என்று குறிப்பிட்டார்.
இதே பேச்சில் அதிமுகவையும் விமர்சித்த அவர், தற்போதைய சூழலில் அதிமுக திமுகவின் பி-டீமாக, அதாவது ஒரு கிளையாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.தொடர்ந்து திமுக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த விஜய், தொழிலதிபர் வீரமணி தொடர்பான பாலியல் வழக்குகளையும் குறிப்பிட்டுப் பேசினார். தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் திமுகவினர் அவதூறாக பேசுவதாகக் கூறிய அவர், தமிழக பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாகக் கூறி புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.‘ஊழலை ஒழிப்பேன்’ என விஜய் விமர்சனம்“நான் வந்தால் லஞ்சம் வாங்க முடியாது, ஊழலை ஒழிப்பேன் என்பதால்தான் என்னை தடுத்து நிறுத்தப் பார்க்கிறார்கள்” என்றும் விஜய் பேசினார்.
மேலும், “ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீர்கள்” என்று கூறி தனது அரசியல் விமர்சனத்தை தொடர்ந்தார்.திமுக ஐடி விங் வெளியிட்ட நக்கல் வீடியோவிஜயின் ஸ்வீட் அங்கிள் பேச்சுக்கு திமுக தரப்பிலும் உடனடியாக பதில் வெளியாகியுள்ளது. திமுக ஐடி விங் சார்பில் வெளியிடப்பட்ட நக்கல் வீடியோவில், பிரச்சாரப் பேருந்தின் மீது ஸ்வீட் டப்பாக்களை ஏற்றிச் செல்வது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனுடன் விஜயை விமர்சிக்கும் வகையில் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.“ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீர்கள் பாதரச பாப்பா” என்ற வாசகத்தையும் திமுக ஐடி விங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.விஜயின் பேச்சு மற்றும் அதற்கு திமுக தரப்பில் வெளியான நக்கல் வீடியோ என மதுராந்தகம் பிரச்சாரம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரின் இந்த வார்த்தைப் போர் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க பாதரச பாப்பா..
#TVKExposed https://t.co/Db9s8Xh0rL
— DMK IT WING (@DMKITwing) September 26, 2026
இதையும் படிங்க: என்ன பெத்த தாயை அசிங்கமாக பேசியபோது கூட பொறுத்துக்கிட்டேன்! ஆனால்... மேடையில் அதை சொல்லி கலங்கிய CM விஜய்! திமுகவுக்கு உரத்த குரலில் பதிலடி..!!!