ஐயோ! கடவுளே..! எப்படியெல்லாம் எமன் வருது பாருங்க... ஒரு நொடிக்குள் 36 வயது வாலிபர் உயிரிழப்பு! பகீர் காட்சி...!!!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் ராஜுலா அருகே, சாலையில் திடீரென குறுக்கே வந்த பன்றியால் ஏற்பட்ட விபத்தில் 36 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். தனது கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அவர், சாலையில் விழுந்து பலத்த காயமடைந்தார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
குறுக்கே பாய்ந்த பன்றியால் நிலைதடுமாறிய ஓட்டுநர்
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒரு பன்றி சாலையின் குறுக்கே பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநரால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
இதையும் படிங்க: விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்! பல மணி நேரம் போராடிய மருத்துவர்கள்... பெற்றோர்களே உஷார்..!!!
பொதுமக்கள் உதவ முயன்றும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை
விபத்தைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து அவருக்கு உதவ முயன்றனர். ஆனால், படுகாயமடைந்த ஓட்டுநர் ( 36 வயது) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து நடந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், சாலையில் திடீரென விலங்குகள் குறுக்கே வருவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Amreli, Gujarat – A 36-year-old motorcycle rider died on the spot in a severe road accident near Mandar village in Rajula taluka of Amreli district after a pig suddenly appeared in front of his bike. The rider, who was on his way to his shop, lost control of the motorcycle when the animal crossed the road unexpectedly. He sustained fatal injuries and died at the scene. The entire incident was captured live on CCTV, and the footage has gone viral on social media. Passers-by rushed to help, but the rider could not be saved.
— NextMinute News (@nextminutenews7) November 11, 2026
இதையும் படிங்க: நல்ல வேலை.. ஏதோ புருஞ்சுருக்கு! சாதாரணமாக நடந்த விஷயம்.. ஆனால் சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததும் கண்ட அதிர்ச்சி! வைரலாகும் மர்ம வீடியோ...!!!