கதறி அழுத வேண்டுதல் எப்போதும் வீண் போகாது! தவெக தொண்டரின் கதறல்....அடுத்த சில நிமிடங்களில் விஜய்க்கு வந்த குட் நியூஸ்.!!!



vijay-government-formation-tvk-2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் புதிய சூழலை உருவாக்கியுள்ளன. முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை எட்ட முடியாததால் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பு நீடித்து வந்தது.

பெரும்பான்மைக்கான கடைசி நேர முயற்சிகள்

தகவலின்படி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்த பின்னரும் கூட்டணியின் பலம் 112 ஆக மட்டுமே இருந்தது. இதனால் மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவை பெற த.வெ.க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த விஜய், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதையும் படிங்க: புதிய மாற்றம்.... நாளை காலை 11:30 மணிக்கு விஜய்க்கு பிரம்மாண்டாமாக நேரு ஸ்டேடியத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா!!!

ஆனால் பெரும்பான்மை தொடர்பான தெளிவான பட்டியல் இல்லாததால் உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த முதலமைச்சர் பாதுகாப்பு கான்வாய்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

நீலாங்கரையில் மீண்டும் பரபரப்பு

இந்த நிலை ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. “என் தலைவர் முதலமைச்சராக வேண்டும்” என்று ஒரு தொண்டர் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் அரசியல் சூழல் மேலும் கவனத்தை ஈர்த்தது.

அதன்பின் இன்று இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய், தனிப்பெரும் கட்சியாக உள்ள நிலையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததாக தகவல்

விஜய்யின் இந்த சந்திப்புக்கு பிறகு ஆளுநர் தரப்பிலிருந்து சாதகமான சிக்னல்கள் கிடைத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, நீக்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்கள் மீண்டும் நீலாங்கரை இல்லத்திற்கு திரும்பியதால் அந்த பகுதி முழுவதும் உற்சாகம் அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பதவியேற்பு தொடர்பான முன்னேற்பாடுகள் த.வெ.க தரப்பில் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: BREAKING : இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.! இப்போ ஓகே சொல்லனா அடுத்த கட்டமாக அதிரடி முடிவு தான்... ஒரு முடிவோடு கிளம்பிய விஜய்!!!