நேற்று நினைத்தது... இன்று நடந்தது! சபாநாயகரை அமர வைத்த கையோடு விஜய்க்கு உதயநிதி செய்த செயல்! விஜய் கொடுத்த வேற லெவல் ரியாக்ஷன்னை பாருங்க.... வைரலாகும் வீடியோ!!!
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற சபாநாயகர் பதவியேற்பு விழாவில் அரசியல் எல்லைகளைத் தாண்டிய ஒரு தருணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை அவை முன்னவர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இணைந்து அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர்.
இதையடுத்து நடந்த ஒரு சிறிய சம்பவமே தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. தனது இருக்கைக்குத் திரும்பிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் அமர்ந்திருந்த பக்கம் திரும்பி கைகூப்பி மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். அதற்கு பதிலாக முதலமைச்சரும் புன்னகையுடன் கைகூப்பி வாழ்த்து தெரிவித்தார்.
அவையில் கவனம் ஈர்த்த தருணம்
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், இந்த காட்சி பலரது கவனத்தையும் பெற்றது. தேர்தல் அரசியலில் கடுமையாக மோதிக்கொண்டாலும், அவைக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டிய விதம் குறித்து அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டது.
இதையும் படிங்க: முகம் முழுக்க சிரிப்பு! செங்கோட்டையன் பதவி ஏற்க வந்ததும் எழுந்து நின்ற விஜய், ராகுல் காந்தி! நெகிழ்ச்சி வீடியோ..!!!
தகவலின்படி, சபாநாயகர் பதவியேற்பு நடைமுறையின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவரும் அவை முன்னவரும் இணைந்து புதிய சபாநாயகரை இருக்கைக்கு அழைத்து செல்வது மரபாக இருந்து வருகிறது. அந்த நடைமுறை முடிந்த பிறகே இந்த தருணம் அரங்கேறியது.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பலரும் அதை சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். “அரசியலில் போட்டி இருந்தாலும், சட்டமன்றத்தில் அரசியல் நாகரிகம் முக்கியம்” என்ற கருத்துகளும் அதிகமாக பதிவாகின.
குறிப்பாக இளம் தலைமுறை அரசியல்வாதிகளாக பார்க்கப்படும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் இருவரும் பரிமாறிக் கொண்ட இந்த மரியாதை, அரசியல் வட்டாரங்களில் தனி கவனத்தைப் பெற்றுள்ளது.
சட்டப்பேரவை சபாநாயகரை அமரவைத்த பின் முதலமைச்சர் விஜய்க்கு வணக்கம் தெரிவித்துவிட்டு இருக்கையில் அமர்ந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!#CMVijay #CMJosephVijay #Udhayanithistalin #JCDprabhakaran #Ravishankar #DMK #ADMK #PMK #VCK #TNAssembly #TVK #MLA #TNAssembly2026 #Newstamil24x7 pic.twitter.com/UFRifHOSBD
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 12, 2026
இதையும் படிங்க: இத யாருமே எதிர்பார்க்கல.... மேடையில் மேஜையை தூக்கிச் சென்ற CM விஜய்! வைரலாகும் அந்த ஆச்சரிய காட்சி...!!!