“புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது”... விஜய் அரசை கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின்!



Udhayanidhi Stalin Strongly Criticises Vijay Government

தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வெற்றி கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 144 உறுப்பினர்கள் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் மூலம் விஜய் அரசு பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்துள்ளது. இந்த விவாதம் முழுவதும் சட்டப்பேரவையில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், விஜய் அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், “புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த கருத்து ஆளுங்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பையும், சட்டப்பேரவையில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

Udhayanidhi stalin

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “இன்று அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. அதில் பிரிந்த ஒரு தரப்பு உங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. பிளவுபட்ட அந்த பிரிவில் ஒரு தலைவரின் வீட்டிற்கு புதிதாக ஒரு சோபா செல்கிறது. அதன் பின்னால் புதிதாக அந்த முதல்வரும் பின்னாலேயே செல்கிறார்” என்று தெரிவித்தார். இந்த பேச்சு சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இதையும் படிங்க: புதிய ஆட்சியா.... இல்ல புஷ்பா பட பாணியில் தவெக ஆட்சியா? மற்றும் சிலர் கட்சி வீட்டுக்கு போன புதிய சோபா பின்னால் போன புதிய முதல்வர் விஜய்! என்ன நடக்குது இங்க? உதயநிதியின் அதிரடி பேச்சு!!!

மேலும், “ஆட்சி அமைப்பதற்கு முன்பாக புதுமையான ஆட்சி, புதுமையான ஆட்சி என்று கூறினீர்கள். ஆனால் உங்கள் ஆட்சி புஷ்பா பட பாணியில் இருக்கிறது” என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனங்களுக்கு தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் நடந்த இந்த விவாதம் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: என்ன இப்படி பேசிட்டாரே.... பேரவையில் விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய உதயநிதி! மக்கள் பேசுறாங்க பேசுறாங்கன்னு என்ன என்ன சொல்லிட்டாரு பாருங்க! ஆவேசமான திமுக பேச்சு!!!