கூட்டணி குறித்த முக்கிய முடிவை சொன்ன TVK விஜய்.! உஷார் நிலையில் தொண்டர்கள்.!



tvk vijay advice about coalition to own party members

தற்போது விஜய் தனது அடுத்த படமான ‘ஜனநாயகன்’ திரைப்படப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் விஜய் ரசிகர்கள் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விளம்பரப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர், விஜய் மகாபலிபுரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அவர் மீண்டும் ‘ஜனநாயகன்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 2026 பொங்கலுக்கு வெளியிடப்படவுள்ள இப்படத்தின் முதல் பாடல் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இறுதி படமான இது அவரது சினிமா மற்றும் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay

ஆனால், விஜயின் ரசிகர்கள், அவர் சினிமாவில் தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பவன் கல்யாண் அரசியலிலும், சினிமாவிலும் செயலில் இருப்பதை எடுத்துக்காட்டி, விஜயும் தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழக கட்சிகள்யாவும் 2026 தேர்தலுக்காக தீவிரமாக களமாடி வருகின்றனர். 

இதையும் படிங்க: திடீர் திருப்பம்! தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி.... இபிஎஸ் அறிவித்த இறுதி முடிவு!

கூட்டணி பேச்சு வார்த்தைகளும் படு தீவிரமாகி இருக்கின்றன. இத்தகைய சூழலில், விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார்? அல்லது தனித்து போட்டியிடுவாரா என்ற சந்தேகம் பரவலாக இருந்து வருகின்றது. விஜயின் முடிவுக்கு மற்ற கட்சிகளும் அவரது தொண்டர்களும் காத்திருக்கின்றனர்.

TVK Vijay

ஆனால், விஜய் தரப்பிலிருந்து ஜனநாயகன் படம் வெளியாகும் வரை கூட்டணி குறித்த எந்த பேச்சு வார்த்தைக்கும் யாரும் செல்லக்கூடாது என்று தன் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இதற்கு காரணம் கூட்டணி முடிவுகள் பட வசூலை பாதிக்கலாம் என்று அவர் அஞ்சுவது தான் என கூறப்படுகிறது. 

சமீபத்திய நிகழ்வுகள் யாவும் விஜய் தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டுமா அல்லது தொடரலாமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை சினிமா பயணத்தை விஜய் தொடர்ந்தார் என்றால் எந்த அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று TVK நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: #சற்றுமுன் : விஜயின் ஜனநாயகன் போஸ்டரில் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் படுகுஷி.!