மூன்று அணிகளாக பிரிந்த தவெக! நள்ளிரவில் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தை... இனி CM விஜய் தலையை காட்டுன்னா தான் சரியாகும்..!!!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாகத்தில் நிலவும் பிரச்சனைகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவட்ட அளவில் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் நேரத்தில், இந்த உட்கட்சி முரண்பாடுகள் விஜய் தலைமையிலான தவெகவுக்கு புதிய சவாலாக மாறியுள்ளன.
மூன்று அணிகளாகப் பிரிந்த தவெக
முதல்வர் விஜய் ஆட்சி நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், கட்சியின் அன்றாட செயல்பாடுகளை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா தரப்பினர் கவனித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வலுவான வெற்றியைப் பெற கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அதிமுகவில் இருந்து விலகி வரும் நிர்வாகிகளுக்கும் தவெக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கட்சிக்குள் மூன்று வெவ்வேறு அணிகள் செயல்படுவதாகக் கூறப்படுவது தலைமையின் கவலையை அதிகரித்துள்ளது. ஆரம்பகால விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு தரப்பாகவும், தவெக தொடங்கப்பட்டபோது இணைந்தவர்கள் மற்றொரு தரப்பாகவும், அதிமுகவில் இருந்து வந்தவர்கள் மூன்றாவது தரப்பாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்குள் எழும் கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதில் தலைமைக்கு சவால் ஏற்பட்டுள்ளதாகவும், சில பிரச்சனைகள் நள்ளிரவு பேச்சுவார்த்தைகள் மூலம் தற்காலிகமாகத் தீர்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்டங்களில் நிர்வாகிகள் - எம்.எல்.ஏ.க்கள் மோதல்
மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்களுக்கும், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றனர்.போஸ்டர், பேனர் ஒட்டுவது தொடர்பான விவகாரங்கள் தொடங்கி டெண்டர் ஒதுக்கீடு வரை பல்வேறு விஷயங்களில் நிர்வாகிகளிடையே மோதல் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பிரச்சனைகள் உள்ளாட்சித் தேர்தலின்போது மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, மேயர் உள்ளிட்ட முக்கிய உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும், கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் சிக்கல்கள் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.
விஜய் தலையிட வேண்டும் என எதிர்பார்ப்பு
மாவட்டங்களில் தொடர்ந்து உட்கட்சி மோதல்கள் எழுவதாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வருவது குறைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கட்சியின் நிர்வாகப் பிரச்சனைகளில் அவர் நேரடியாகத் தலையிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் தவெக, ஏற்கெனவே வலுவான மாவட்டக் கட்டமைப்பைக் கொண்ட திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தச் சூழலில், நிர்வாகிகளிடையே நிலவும் முரண்பாடுகளுக்குத் தீர்வு கண்டு கட்சியின் அமைப்பை ஒருங்கிணைப்பதே தலைமையின் முக்கியப் பணியாக இருக்கும்.
இதையும் படிங்க: 9 நிமிட வீடியோக்கு தவெக கொடுத்த தரமான பதிலடி! தமிழக அரசியலில் வெடித்த அடுத்த பூகம்பம்..!!!