அடிஆத்தி..! ராட்சத மலைப்பாம்பின் மீது ஏறி சறுக்கி விளையாடிய சிறுவர்கள்! வைரலாகும் ஷாக் வீடியோ...!!!



indonesia-children-play-with-giant-python

இந்தோனேசியாவில் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பின் மீது சிறுவர்கள் ஏறி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சறுக்கு மரத்தில் விளையாடுவது போல பாம்பின் உடல் மீது ஏறி அவர்கள் விளையாடியுள்ளனர். அருகில் இருந்த பெரியவர்கள் தடுக்காமல் வீடியோ எடுத்தது தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

20 அடி மலைப்பாம்பின் மீது ஏறி விளையாடிய சிறுவர்கள்

பொதுவாக சிறுவர்கள் விளையாட்டு மைதானங்களில் உள்ள சறுக்கு மரம், ஊஞ்சல் போன்றவற்றில் விளையாடுவார்கள். ஆனால், இந்தோனேசியாவில் சில சிறுவர்கள் ஆபத்தை உணராமல் சுமார் 20 அடி நீளமுள்ள ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் மீது ஏறி விளையாடியுள்ளனர். பாம்பின் நீண்ட உடலைச் சறுக்கு மரம் போலப் பயன்படுத்தி அவர்கள் விளையாடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் 10 வயது சிறுவன் பரிதாப பலி..! அதிர்ச்சி சம்பவம்..!!!

விஷமற்றது என்றாலும் ஆபத்தான மலைப்பாம்பு

ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு உலகின் மிக நீளமான பாம்பு வகைகளில் ஒன்றாகும். இது விஷமற்றது என்றாலும், தனது வலுவான உடலால் இரையைச் சுற்றி இறுக்கிக் கொல்லும் திறன் கொண்டது. அத்தகைய பாம்பின் மீது சிறுவர்கள் அச்சமின்றி விளையாடியுள்ளனர். அப்போது அருகில் இருந்த பெரியவர்கள் அவர்களைத் தடுக்காமல் செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பெரியவர்களின் அலட்சியத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். ஆபத்தான பாம்பின் அருகே குழந்தைகளை அனுமதித்தது ஏன் என்றும், அவர்களைத் தடுக்காமல் வீடியோ எடுத்தது பொறுப்பற்ற செயல் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பாம்பு எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடிய சூழல் இருந்ததால், சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பியதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.