இடைத்தேர்தல் நேரத்தில் அமைச்சரவையில் நடக்கும் மாற்றம்...! சிக்கலில் சிக்கிய 3 மூத்த அமைச்சர்கள்..? CM விஜய்யின் முடிவால் பரபரப்பில் தவெக..!!!



tvk-cabinet-reshuffle-vijay-rajmohan-ministers

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசில் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. சில அமைச்சர்களின் துறைகளை மாற்றுவது, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜ்மோகனுக்கு கூடுதல் பொறுப்பு?

முதல்வர் விஜய் தற்போது கவனித்து வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை அமைச்சர் ராஜ்மோகனிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட துறைகளை ஏற்கனவே கவனித்து வரும் ராஜ்மோகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது நிர்வாக ரீதியாக பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: யார் சொன்னாலும் ஓட்டு போடாதீங்க... பாமக வின் இந்த ஒரு ட்விஸ்ட்டை முதல்வர் விஜய்யே எதிர்பார்த்து இருக்கமாட்டாரு! தவெகவுக்கு எதிராக துருப்புச்சீட்டான பாமக...!!!

சில அமைச்சர்களுக்கு பதவி மாற்றம்?

அதேநேரத்தில் சரத், ஜெகதீஸ்வரி, விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், அமைச்சரவை மாற்றத்தில் சிலரது பதவிகள் அல்லது துறைகள் மாற்றப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

நீண்டகால கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பா?

இடைத்தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. குறிப்பாக, தவெக தொடங்குவதற்கு முன்பிருந்தே விஜயுடன் பயணித்த நிர்வாகிகள் மற்றும் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையே மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவை தவெக ஏற்கனவே அமைத்துள்ளது.

அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகே அமைச்சரவை மற்றும் துறை ஒதுக்கீடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க பாதரச பாப்பா..! CM விஜய்க்கு வீடியோ மூலம் தரமான பதிலடி கொடுத்த திமுக...!!!