ஆ.மு., ஆ.பி...! நம்பவைத்து கழுத்தறுத்து திமுக; நாடக காட்சியால் கொந்தளிக்கும் டிடிவி தினகரன்..! 

ஆ.மு., ஆ.பி...! நம்பவைத்து கழுத்தறுத்து திமுக; நாடக காட்சியால் கொந்தளிக்கும் டிடிவி தினகரன்..! 


TTV Dinakaran angry tweet

ஆட்சிக்கு முன்னர் கூறியதை செய்யாமல் ஆட்சிக்கு வந்த பின் மக்களை ஏமாற்றும் வழக்கத்தை திமுக செய்து வருகிறது என டிடிவி தினகரன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஸ்டாலின்

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் பணிக்காலம் இன்றோடு நிறைவுபெற்றதை தொடர்ந்து, அவர்களுக்கு மேற்படி பணி நீட்டிப்பு செய்யப்படாத காரணத்தால் சுகாதாரத்துறை அவர்களை பணிக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொண்டது. 

இந்த விசயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "'கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம்' என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது. 

ஸ்டாலின்

எத்தனையோ விஷயங்களில் தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவரும் தி.மு.க அரசு, நெருக்கடியான நேரத்தில் தங்களது உயிரைத் துச்சமென நினைத்து பணியாற்றிய செவிலியர் பிரச்னையிலும் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இது ஆட்சியல்ல; எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி என்பதற்கு செவிலியர்களை பணிநீக்கம் செய்திருப்பது மற்றுமொரு சாட்சி!" என்று தெரிவித்துள்ளார்.