அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர் இளையராஜா..! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.!

அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர் இளையராஜா..! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.!


thirumavalavan talk about ilayaraja

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மொத்தம் 12 பேர் நியமன எம்.பி.க்கள். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜ்யசபா நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவது வழக்கம். அதனடிப்படையில் இசைத்துறையில் இசைஞானி இளையராஜா செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் வகையில் இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இசைஞானி இளையராஜா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் பணியாற்றக்கூடிய ஆளுமை மிக்கவர். பாரத ரத்னா விருது பெறவும் முழுமையான  தகைமை உடையவர் இசைஞானி இளையராஜா அவர்கள். என பதிவிட்டுள்ளார்.