மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
பெரியாருக்கு எதிரான சீமானின் வாதம்.. திருமாவளவன் சொல்வது என்ன?

கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிராக சில வாதங்களை முன்வைத்தார். இந்த விஷயம் சர்ச்சையானது.
சர்ச்சை கருத்துக்கள்
இதனால் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் இல்லத்தினை பல்வேறு பெரியாரிய அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தன. திமுக சீமானுக்கு எதிராக தனது கருத்தையும் பதிவு செய்து வந்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமவளவனிடம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிராக சமீபகாலமாக பேசுவது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் - வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவன்.!
திருமாவளவன் பேட்டி
அதற்கு பதிலளித்து பேசிய விசிக தலைவர் & எம்.பி திருமாவளவன், "சீமான் ஏன் இப்படி செயல்படுகிறார்? இவ்வாறு பேசுகிறார்? என்று விளங்கவில்லை. அவரை யார் இப்படி உசுப்பி விடுகிறார்கள் என்றும் தெரியவில்லை. அவருடைய போக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நேர் எதிரானதாக இருக்கிறது" என கூறினார்.
இதையும் படிங்க: யார் அந்த சார்? - உரிய விசாரணை நடத்த திருமாவளவன் கோரிக்கை.!