சற்றுமுன்... "குதிரை பேரம் " சர்ச்சையால் திமுக - அதிமுகவினர் இணைந்தனர்....! பரபரப்பில் அரசியல் களம்!!!



tamil-nadu-assembly-horse-trading-row

தமிழக சட்டமன்றத்தில் ‘குதிரை பேரம்’ என்ற வார்த்தைப் பயன்பாடு தொடர்பாக திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எம்பிசிடி பிரபாகர் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களும் குரல் கொடுத்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

‘குதிரை பேரம்’ குறித்து எழுந்த சர்ச்சை

சட்டமன்றத்தில் பேசிய எம்பிசிடி பிரபாகர், குதிரை பேரம் தொடர்பாக திமுகவும் அதிமுகவும் இணைந்து பேசுவதாக குற்றம்சாட்டினார். இதனால் அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மறுபுறம், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: ஆட்டத்தை ஆட ஆரம்பித்த திமுக! அறிவாலயத்தின் 'ஸ்கெட்ச்'.....அதிர்ச்சியில் தவெக.! குதிரை பேர ரூட்டையே மொத்தமா மாத்தியாச்சு.... எதிர்பார்க்காத ட்விஸ்ட்!!!

அவையில் நீடித்த கூச்சல் குழப்பம்

இரு தரப்பினரும் மாறி மாறி குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உறுப்பினர்களின் எதிர்ப்பால் சிறிது நேரம் விவாதம் பரபரப்பானது. இதையடுத்து நிலைமையை சமாளிக்கும் வகையில் அமைச்சர் எ.வ. வேலு விளக்கம் அளித்தார்.

அமைச்சர் எ.வ. வேலு விளக்கம்

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளின்போதுகூட ‘குதிரை பேரம்’ என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ. வேலு சுட்டிக்காட்டினார். அந்த வார்த்தையை குறிப்பிட்டதே தவிர, அதிமுகவுடன் இணைந்து எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அமைச்சரின் விளக்கத்துக்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 

இதையும் படிங்க: எல்லா பக்கமும் சுத்தி வளைக்கும் விஜய்! ஸ்டாலினுக்கு ஒரே கூட்டத்தில் வைத்த செக்..... அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!