அரசியல் தமிழகம்

செந்தில் பாலாஜிய-" வாழ்த்திய " டிடிவி தினகரன்..!!

Summary:

senthil_balaji to dmk

தி.மு.க.வில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என்று அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வாழ்த்து தொிவித்துள்ளாா்.  

 

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், அமமுக கரூா் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி இன்று ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தாா். இதனைத் தொடா்ந்து அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், செந்தில் பாலாஜியை எனக்கு 2006ம் ஆண்டில் இருந்து எனக்கு நன்றாக தொியும். 

அவா் தி.மு.க.வுக்கு சென்றதில் எங்களுக்கு எந்த பாதிப்பும், எந்த வருத்தமும் இல்லை. கரூாில் உள்ள அமமுக உறுப்பினா் சோ்க்கை படிவங்கள் அவரிடம் தான் உள்ளது. அது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவா் அந்த படிவங்களை வழங்கினால் மகிழ்ச்சி.

பன்னீா் செல்வம், பழனிசாமி க்கான பட முடிவு

ஆா்.கே.நகா் தோ்தலில் வெற்றி பெற்றதில் இருந்து தி.மு.க. எங்களைக் கண்டு அஞ்சுகிறது. செந்தில் பாலாஜி இணைந்ததை பெரிய விழாவாக கொண்டாடியதில் இருந்து தி.மு.க. எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது என்று உணர முடியும். 

தொடர்புடைய படம்

5 மாநில தோ்களில் பா.ஜ.க. தோற்கும் என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். எந்த காலத்திலும் பா.ஜ.க.வை நான் ஆதரிக்க மாட்டேன். அதே போன்று பன்னீா் செல்வம், பழனிசாமியுடனும் சேரமாட்டேன் என்று அவா் தொிவித்துள்ளாா். 
 


Advertisement