அண்ணாமலை உண்மையிலேயே படித்து தான் பாஸ் ஆனாரா? செல்லூர் ராஜு சரமாரி கேள்வி!Sellur Raju roasted annamalai

8வது மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால்,  இரு தரப்பை சேர்ந்த தலைவர்களும் மாறி மாறி கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாகரிகமாக விமர்சனம் செய்தாலும், அடுத்த கட்ட தலைவர்கள் பாஜகவையும், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சனம் செய்து வருவது அரசியல் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Parliament election

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது பேசிய அவர், இன்னும் சில ஆண்டுகளில் அதிமுக என்ற கட்சியே அழிந்துவிடும் என கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த செல்லூர் ராஜு பேசியதாவது, மத்தியில் ஆளுங்கட்சி வெங்காய குமரியில் அண்ணாமலை பேசி வருவதாகவும், அதிமுக அழிந்து போகும் என கூறிய அழகிரி தற்போது அரசியலிலே இல்லை என கூறியுள்ளார்.

Parliament election

தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை உண்மையிலேயே படித்து தான் பாஸ் ஆனாரா? அல்லது பிட் அடித்து பாஸ் ஆனாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.