தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்தால் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் - அமைச்சர் சேகர்பாபு!
தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி ஒவ்வொரு முறை வருகை தரும் போதெல்லாம் திமுகவிற்கு வாக்கு சதவீதம் அதிகரிப்பதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை திரு.வி.க நகர் நம்மாழ்வார் பேட்டை பகுதியும் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடசென்னை கட்டமைக்கும் தொலைநோக்கு திட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.4614 கோடி மதிப்பில் வட சென்னையில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் மூலம் வடசென்னை மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார மேம்படும். அன்றாட தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊதிய போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் திமுகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடி தமிழகத்திலே கூட தங்கி அவருடைய செல்வாக்கு என்ன என்பது வட மாநிலங்களில் வாழும் மக்களுக்கு புரியும். இந்த தேர்தலில் பாஜகவை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர் என அவர் கூறியுள்ளார்.