அப்போ ஜெயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலா போட்ட ஸ்கெட்ச்! இப்போ இந்த காங்கயமா....உண்மையை உடைத்து சசிகலா போட்ட சபதம்!!!



sasikala-rm-veerapan-kangeyam-secret-aiadmk

அதிமுகவில் பழைய அரசியல் சம்பவங்களை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் சசிகலா பேசியுள்ள தகவல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவிய காலத்தில், யாருக்கும் தெரியாமல் தாம் செய்த உதவியால்தான் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என சசிகலா தெரிவித்துள்ளார். இந்த பேச்சு தற்போது அதிமுக வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு தெரியாமல் போட்ட ஸ்கெட்ச்

தகவலின்படி, ஆர்.எம். வீரப்பனுக்கு தேர்தலில் சீட் வழங்க ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தாராம். அந்த நேரத்தில் அவரை போட்டியிட வைக்க சசிகலா தனியாக முயற்சி எடுத்ததாக கூறியுள்ளார். குறிப்பாக ‘காங்கயம்’ தொகுதியை மையமாக வைத்து திட்டமிட்டு நடவடிக்கை எடுத்ததால்தான் அவர் தேர்தலில் களமிறங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின் ஆர்.எம். வீரப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அந்த முடிவு பின்னாளில் ஜெயலலிதா மற்றும் ஆர்.எம். வீரப்பன் இடையேயான உறவை மெதுவாக சீராக்க உதவியதாகவும் சசிகலா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரிசார்ட்டில் நடந்த ரகசிய பேச்சு! என் புள்ளை மேல சத்தியம் பண்ணி நான் சொல்றேன்.... எமோஷனல் சவால் விடுத்த சி.வி. சண்முகம்!!!

“அம்மாவிற்கே தெரியாமல் செய்த உதவி”

இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த சசிகலா, “அம்மாவிற்கே தெரியாமல் நான் செய்த அந்த உதவி, பின்னாளில் அவர்களை இணைத்தது” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அரசியலில் பகை இருந்தாலும், ஒரு கட்டத்தில் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகளை தாம் சமாளித்தது போல, தற்போதும் கட்சிக்குள் இருக்கும் பிரிவினைகளை சரிசெய்து அனைவரையும் ஒன்றிணைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சசிகலா பேச்சால் கிளம்பிய விவாதம்

சசிகலாவின் இந்த காங்கயம் குறித்த ரகசிய பேச்சு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா கால அரசியலில் பின்னணியில் நடந்த முக்கிய முடிவுகள் குறித்து மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: பதவி ஆசை எடப்பாடிக்கு பழினிச்சாமி கண்ணை பறித்துவிட்டது! உயிர் இருக்கும்வரை எதிர்ப்போம்.... சி.வி. சண்முகத்தின் அதிரடி சபதம்! சென்னையில் பரபரப்பு பேட்டி!!!