கலைஞர் கனவில் கூட இப்படி நடக்கும்ன்னு நினைச்சிருக்க மாட்டாரு! பின்னாடி நிற்பவர்களை எளிதில் எடை போட கூடாது.... பிரபல இயக்குனரின் நக்கல் கலந்த நய்யாண்டி பதிவு..!!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை இயக்குநர் ராம்கோபால் வர்மா பகிர்ந்திருப்பதும் தற்போது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
எக்ஸ் தளத்தில் எப்போதும் சர்ச்சையான கருத்துகளால் பேசப்படும் ராம்கோபால் வர்மா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் எடுத்த பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒரு விழாவில் கருணாநிதி ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் தருணம் அதில் இடம்பெற்றுள்ளது.
கருணாநிதி பின்னால் நின்ற சிறுவன்
அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அருகில் நிற்க, கருணாநிதியின் பின்னால் சிறுவனாக விஜய் காணப்படுகிறார். பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தப் படம், தற்போதைய அரசியல் சூழ்நிலையால் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வந்த திமுகவை தெறித்து ஓடவிட்ட குழந்தை! இங்க வராதீங்க.... எங்க ஓட்டு TVK க்கு தான்....! சிறுமியின் துணிச்சலான வீடியோ!!!
புகைப்படத்துடன் பதிவிட்ட கருத்தில்தான் அதிக கவனம் திரும்பியுள்ளது. “தன் பின்னால் நிற்கும் இந்தச் சிறுவன் ஒருநாள் வளர்ந்து திமுகவை வீழ்த்துவான் என்று கருணாநிதி கனவிலும் நினைத்திருக்க மாட்டார்” என்று ராம்கோபால் வர்மா குறிப்பிட்டுள்ளார்.
திமுகக்கு பெரிய பின்னடைவு
நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் 133 இடங்களை கைப்பற்றிய திமுக, இந்த முறை 59 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆட்சியையும் இழந்துள்ளது.
அதே நேரத்தில், விஜய் தலைமையிலான தவெக முதல் முறையாக தேர்தலில் களமிறங்கி 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த திராவிடக் கட்சிகளின் இருதரப்பு அரசியல் ஆதிக்கம் முறியடைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் பதிவு
ராம்கோபால் வர்மாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “திமுகவை வீழ்த்தியது மக்கள் தீர்ப்பு” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபக்கம் “பின்னால் நிற்பவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்ற வகையிலும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள விஜய்யின் இந்தப் பழைய புகைப்படம் தற்போது இணையத்தில் டிரெண்டாக மாறியுள்ளது.
Kalaingar wouldn’t have dreamed that the kid behind him would one day destroy his party 🙏👍🔥 pic.twitter.com/7NNp6Ge73S
— Ram Gopal Varma (@RGVzoomin) May 5, 2026
இதையும் படிங்க: இந்த அன்பு வேற யாருக்கும் கிடைச்சது இல்ல! அண்ணன்கள் பட்டியலில் உள்ள முதல் பெயரை பாருங்க... வைரலாகும் அந்த பத்திரிக்கை புகைப்படம்!!!