திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பரபரப்பு ட்வீட்!

Rajini simaan


Rajini simaan

கடந்த சில நாட்களாகவே ரஜினியின் அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தற்போது அவரின் அரசியல் நிலையை கண்டு வாழ்த்துகள் மற்றும் தனது வரவேற்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த தான் மூன்று திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறியுள்ளார்.

rajini

மேலும், கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என குறிப்பிட்ட அவர் கட்சியில் குறிப்பிட்ட அளவிலையே தலைவர் பதவிகள் இருக்கும் எனவும், பதவிகள் நிரந்தரமாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக, தான் கட்சி ஆரம்பித்தாலும் நான் முதல்வர் ஆக மாட்டேன் எனவும் அதிக அளவில் இளைஞர்களுக்கே வாய்ப்பு எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை தெரிந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து தனது வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.