அரசியல் தமிழகம்

சசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.! உசிலம் பட்டியில் பரபரப்பு போஸ்டர்.!

Summary:

சசிகலாவுக்கு ஆதரவாக ஒய்வு பெற்ற காவல்துறையினர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சசிகலா விடுதலை குறித்து அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், சசிகலா இந்த வாரம் விடுதலை ஆவார் என தெரிவித்துள்ளார். இதனால், சசிகலா வருகைக்காக அமமுகவினர் மற்றும் அதிமுகவினர் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை சேர்ந்த  ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒச்சாத்தேவர்  என்பவர் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி உள்ளார். அந்த போஸ்டரில், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்த சோழநாட்டு இளவரசி சின்னம்மா சசிகலா அவர்களே, 2021ஆம் ஆண்டு தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க.. தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு. ஒற்றர் படை, போர் படை, தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
 


Advertisement