BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இந்துக்கள் விஷயத்தில் மட்டும் பாரபட்சம் பார்க்கும் திமுக! கொந்தளித்த மோடி!!
தமிழகத்தில் இந்து கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகப்பெரிய அராஜகம் என பிரதமர் மோடி விமர்சனம்.
தமிழகத்தை பொறுத்தவரையில் அனைத்து மதத்தினரும் ஒன்றாக வாழும் மாநிலமாக இருக்கின்றது. தமிழகம் மட்டும் இல்லை இந்தியா முழுவதுமே வெவ்வேறு மதத்தினர் ஒன்று கூடி தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு சர்ச், மசூதி, இந்து கோவில்கள் செயல்பட்டு வருகிறது. அந்த அந்த மதத்தினர் அவர்களுக்கே உரிதான சாஸ்திரம் சம்ப்ரதாயம் மற்றும் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகிறார்கள். இதுவும் அனைத்து மதத்திற்கும் பொதுவே.
இப்படி இருக்கையில், தமிழக அரசு இந்து கோவில்களை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒருதலை பட்சமாகவே உள்ளது. அதிலும் இந்துக்கள் நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று முழங்கும் திராவிட அரசு இவ்வாறு செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே மக்கள் கருதுகின்றன.
சமீபத்தில் கூட திமுக அமைச்சரும், முதலமைச்சரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசியிருந்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று மொழிந்தார். அவரது இந்த கருத்தில் உறுதியாகவும் நின்றார் என்பது குறிப்பிடதக்கது.
ஒரு மதத்தின் நம்பிக்கைகளை மூடநம்பிக்கையாக என்னும் ஒரு கட்சி, ஒரு மதத்தின் வழிபாட்டு முறைகளை விமர்சிக்கும் ஒரு கட்சி ஏன் அந்த மதத்தின் வருமானத்தை மட்டும் கைநீட்டி வாங்கி கஜானாவை நிரப்ப நினைக்கின்றது. இந்து மதம் கசக்கும் மதத்தினால் வரும் வருமானம் இனிக்குமா? என்பதே சாமானிய மக்களின் மன குமுறலாக இருக்கின்றது.
அப்படியே கோவில்கள் அரசுக்கு சொந்தம் என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட, அது ஏன் இந்து மத கோவில்கள் மட்டும்? என்ற கேள்விக்கான பதில் மட்டும் கிடைக்கப்போவதில்லை. கோவில்கள் அரசு உரிமை என்றால் அது அனைத்து மத கோவில்களுமாக தானே இருக்க வேண்டும்? இந்து மதம் மீது மாட்டும் தனி அக்கறையா? பரபட்சமா?.
இப்படியே பல்வேறு கேள்விகள் நம் மனதில் எழ, விடை மட்டும் கிடைக்காமலே போய்விடுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதில், தமிழகத்தில் இந்து கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகப்பெரிய அராஜகம் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த விமர்சனத்துக்கு திமுக பதிலளிக்குமா?