வெற்றி தலித்துகளுக்கு சுலபமில்லை.. திருமாவளவன் வெற்றிக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பரபரப்பான ட்வீட்.!

வெற்றி தலித்துகளுக்கு சுலபமில்லை.. திருமாவளவன் வெற்றிக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பரபரப்பான ட்வீட்.!


parliment-election-2019---sithamparam---thiruma---direc

நடந்து முடிந்த நாடாளுமனற தேர்தலில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 352 இடங்கள் வரை அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரை நடைபெற்ற 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக அணி 37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார்.

Election 2019

கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெற்றார். இதனால் இம்முறை இத்தொகுதியில் எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் கடுமையான போட்டி கொடுத்தார்.

ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இதனால் யார் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற பரபரப்பு உருவானது. இதனால் முடிவு தெரிய நள்ளிரவு ஆகியது. இறுதியாக அதிகாலை 3 மணியளவில் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இயக்குனர் பா ரஞ்சித் அதிரடியாக தனது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டதை பாராட்டியிருக்கிறார். மேலும் அண்ணன் திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர் எவர் வெற்றியுடனும் ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! என கூறியுள்ளார் ரஞ்சித்.