துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்க குற்றச்சாட்டு !

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்க குற்றச்சாட்டு !


ops

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், பலமுறை ரகசிய சந்திப்பு நடத்தியிருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ops

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஸ்டாலின் - தினகரன் ரகசிய சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துணை முதல்வர், இருவருக்கும் இடையே ஒருமுறை அல்ல, பலமுறை ரகசிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாக பதிலளித்தார்.

ops

20 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி இருப்பதாக துணை முதல்வர் குறிப்பிட்டார்.

ops

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் ஒருவரும் இதுவரை அதிமுகவிற்கு வரவில்லையே என்று செய்தியாளரின் கேள்விக்கு, அழைப்பு விடுப்பது தங்களின் மாண்பு என்றும் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.