கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
இரண்டு நாட்கள் தொடர் விசாரணை., முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி.!!
அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, தற்போது அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவர் சார்பு நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை தற்போது ரைடு நடத்தி வருகிறது.
தொடர்ந்து மூன்று நாட்களாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை தீவிரமாக ரைட் நடத்தி வந்தது. பின்னர், அவரை விசாரணைக்காக அவரது காரிலே அழைத்து சென்றனர்.
இதுகுறித்து திமுக அமைச்சர் துரைமுருகன் அவரது கருத்தாக என்னதான் நடக்கும் நடக்கட்டும் என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினும் திமுக எதைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார். அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து முதல்வரிடம் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.