ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் திடீர் அனுமதி.!


Minister Kayalvizhi Selvaraj Admit on Hospital

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் கயல்விழி செல்வராஜ். இவர் சென்னையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Minister Kayalvizhi

அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், முடிவுகள் வந்த பின்னர் எம்மாதிரியான காய்ச்சல் என்பது உறுதி செய்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.