எங்கள கேக்குறீங்களே.. உங்க மண்டைல ஏதாவது இருக்கா..? உங்க கொசு வழங்கும் திட்டத்தை மறந்துடீங்களே.... பதிலடி கொடுத்த விர்ச்சுவல் வாரியர்ஸ்ஸின் வீடியோ..!!!!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதள அணியினருக்கு இடையிலான வார்த்தைப் போர் தற்போது இணையத்தில் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. தவெக விர்ச்சுவல் வாரியர்ஸை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியாவின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளான நிலையில், அதற்கு பதிலடியாக பழைய வீடியோ ஒன்றை தவெகவினர் வைரலாக்கி வருகின்றனர்.
விமர்சனத்தால் உருவான சர்ச்சை
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய மேயர் பிரியா, தமிழக வெற்றிக் கழகத்தின் Virtual Warriors எனப்படும் சமூக வலைதளப் பக்க நிர்வாகிகளை கடுமையாக சாடினார். அப்போது, “அவர்கள் மண்டையில் ஏதாவது இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தவெக தொண்டர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் பலரும் மேயர் பிரியாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
இதையும் படிங்க: தவெக அரசை குறிவைத்து மு.க.ஸ்டாலின் போட்ட பதிவை பாருங்க....! இணையத்தில் செம வைரல்...!!!
பழைய வீடியோவை வைரலாக்கிய தவெகவினர்
இந்த நிலையில், மேயர் பிரியாவின் பழைய செய்தியாளர் சந்திப்பு வீடியோ ஒன்றை தவெக Virtual Warriors தேடி எடுத்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
அதில், மக்களுக்கு “கொசுவலை வழங்கும் திட்டம்” என்று கூறுவதற்குப் பதிலாக, நாக்கு பிறழ்ந்து “கொசு வழங்கும் திட்டம்” என்று மேயர் பிரியா பேசியிருப்பது பதிவாகியுள்ளது.
மீம்ஸ்கள் மூலம் பதிலடி
அந்தக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு, “மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பு தாங்கள் பேசியதைப் பாருங்கள்” என்ற கருத்துடன் பல மீம்ஸ்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை மேற்கோள் காட்டி பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதனால், மேயர் பிரியா மற்றும் தவெக ஆதரவாளர்களுக்கு இடையிலான இணையவழி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
எங்களை கேக்குறியே, உன் மண்டைல எதாச்சு இருக்கா கோமாளி 🤭😂
கொசு வழங்கும் திட்டம் அமல்படுத்துன ஆளு தான நீ…😭😅
pic.twitter.com/qwEA5oOcQD https://t.co/XdehVlA0QI— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) June 7, 2026
இதையும் படிங்க: பொது மேடையில் ஆபாச வார்த்தைகளை பேசிய திமுக நிர்வாகி! கேக்கவே காது கூசுது..... அதிர்ச்சி வீடியோ..!!!