மேயர் பிரியா பயணித்த காருக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதா?.. பாஜகவினர் கையில் சிக்கிய ஆதாரம்.. வச்சி செய்யும் பரிதாபம்!

மேயர் பிரியா பயணித்த காருக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதா?.. பாஜகவினர் கையில் சிக்கிய ஆதாரம்.. வச்சி செய்யும் பரிதாபம்!


mayor-priya-foot-board-car-insurance-expired

 

வங்கக்கடல் பகுதியில் உருவாகி மாமல்லபுரத்தில் கரையை கடந்த மாண்டஸ் புயலினால், சென்னை மற்றும் அதன் அருகேயுள்ள கடலோர பகுதிகளும் பாதிக்கப்பட்டன. 

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், சென்னை மாநகர மேயர் பிரியா, சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் புயல் பாதிப்புகளை நேரில் காண சென்றனர். 

அப்போது, மேயர் பிரியா அவசர கதியில் காரின் வெளிப்புறம் நின்றவாறு பயணம் செய்தார். திமுகவை சேர்ந்தவர்களால் அவரின் செயல் மக்களுக்கான பணி என போற்றப்பட்டாலும், நெட்டிசன்களால் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது. 

Mayor Priya

இந்த நிலையில், மேயர் பிரியா தொங்கிக்கொண்டு பயணம் செய்த காரின் இன்சூரன்ஸ் கடந்த 2019ம் ஆண்டே நிறைவடைந்துவிட்டது. அதனை புதுப்பிக்காமல் வாகனம் இயக்கப்பட்டு வருகிறது என அரசு ஆவணங்களில் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. 

பாஜகவினர் இதுதொடர்பான பல்வேறு புகைப்படத்தை தங்களின் சமூக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.