இறுதியில் என்ன வேணாலும் நடக்கும்! அன்றும் இப்படித்தான் நடந்தது.... தவெக தொண்டர்களே தயவு செஞ்சு இப்போ கொண்டாடாதீங்க! புது குண்டை தூக்கி போட்ட மாரிதாஸ்..!!



maridhas-comment-on-tvk-election-counting-trend

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை சூடுபிடித்துள்ள நிலையில், தொடக்க சுற்றுகளில் முன்னிலை பெற்றதாகத் தோன்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு பின்னர் நிலை மாறலாம் என அரசியல் விமர்சகர் மாரிதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைதள பதிவு தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

தொடக்க முன்னிலை பற்றிய விளக்கம்

மாரிதாஸ் தனது பதிவில், தேர்தல் நாளில் தவெக மற்றும் விஜய் ஆதரவாளர்கள் அதிகாலையிலேயே வாக்களித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் முதல் 3 சுற்றுகளில் அந்த கட்சிக்கு முன்னிலை கிடைப்பது இயல்பானது என்று கூறியுள்ளார். ஆனால், 4 அல்லது 5 சுற்றுகளைத் தாண்டிய பின்னரே உண்மையான நிலை தெளிவாக தெரிய வரும் என அவர் விளக்கியுள்ளார்.

இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வந்த திமுகவை தெறித்து ஓடவிட்ட குழந்தை! இங்க வராதீங்க.... எங்க ஓட்டு TVK க்கு தான்....! சிறுமியின் துணிச்சலான வீடியோ!!!

முந்தைய தேர்தல் எடுத்துக்காட்டு

முந்தைய தேர்தலை நினைவுகூர்ந்த அவர், விஜயகாந்த் தலைமையிலான கட்சி தொடக்கத்தில் பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும் பின்னர் நிலை மாறியதை சுட்டிக்காட்டினார். அதேபோல் இம்முறையும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கொண்டாட்டத்தில் எச்சரிக்கை

தற்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என தொண்டர்களும் ரசிகர்களும் பல இடங்களில் கொண்டாடி வருவதை குறிப்பிடும் மாரிதாஸ், முழு முடிவுகள் வெளிவந்த பிறகே கொண்டாட்டங்களை தொடர்வது நல்லது என கூறியுள்ளார். பொறுமையாக இருந்து இறுதி நிலையை கவனிக்க வேண்டும் என்ற செய்தியையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதையும் படிங்க: தேர்தலுக்கு இன்னும் 2 நாள் தான் இருக்கு....தவெக உறுப்பினர் கார்டை கசக்கி பிழிந்த நிர்வாகி! 100-க்கும் மேற்பட்டோருடன் திமுகவில் இணைவு! ஆவேச வீடியோ!!!