நான் வெற்றிபெற்றால் 100 சவரன் நகை, 20 லட்சத்தில் வீடு, காஸ்ட்லி கார்.! வேட்பாளரின் வேற லெவல் வாக்குறுதி.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல கட்சிகள் தங்களின் அசத்தலான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பொதுமக்களை கவர்ந்துள்ளனர். அந்த வகையில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் துலாம் சரவணன் வித்தியாசமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அவரது தேர்தல் அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும் இலவச ஐபோன், மக்கள் அனைவருக்கும் நீச்சல்குள வசதியுடன் 3 மாடி வீடு, வீடு ஒன்றிற்கு ஆண்டு தோறும் ஒரு கோடி ரூபாய் வங்கி கணக்கில் போடப்படும்,
அனைத்து வீட்டிற்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், ஒவ்வொரு வீட்டிற்கு சிறிய வகை ஹெலிகாப்டர், இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ, பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் தங்க நகைகள் என நீள்கிறது துலாம் சரவணனின் வாக்குறுதிகள்.