குஷ்பு போட்ட ஒத்த பழமொழி...! யார் முட்டாள்.? யார் புத்திசாலி.? திகைப்பில் பலர்..!

குஷ்பு போட்ட ஒத்த பழமொழி...! யார் முட்டாள்.? யார் புத்திசாலி.? திகைப்பில் பலர்..!


kusbu-wrote-proverbs

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ஒருகட்டத்தில் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் குஷ்பு. சினிமாவில் கலக்கிய குஷ்பு தற்போது அரசியல் பக்கம் திரும்பி உள்ளார். மேலும் சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 

ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு குஷ்பு நடித்துள்ள அண்ணாத்த படம் சமீபத்தில் வெளியானது. சினிமாவிலும் சரி, அரசியலுக்கு வந்த பிறகும் சரி பிரபலமாகவே இருப்பவர் நடிகை குஷ்பு. திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து தற்போது பாஜக.,வில் இருந்து வருகிறார் . பாஜக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவராக இருக்கும் நடிகை குஷ்பு சுந்தர் அவரது ட்விட்டர் பக்கத்தில் நாள்தோறும் எதாவது கருத்துக்களை பதிவிட்டு வருவார். அந்தவகையில் நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பழமொழி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு ஆங்கில பழமொழி உள்ளது, அவர்களில் பலர் இங்கு கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். 'ஒரு புத்திசாலி ஏழு ஆண்டுகளில் பதிலளிக்கக்கூடிய கேள்விகளை விட ஒரு முட்டாள் ஒரு மணி நேரத்தில் அதிக கேள்விகளை கேட்க முடியும்" என குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பிறகு என் வழக்கை முடித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.