முதலமைசர் தலைமையில் அமைதி பேரணி! ஏராளமான திமுகவினர் பங்கேற்பு!!

முதலமைசர் தலைமையில் அமைதி பேரணி! ஏராளமான திமுகவினர் பங்கேற்பு!!


Karunanithi memorial day rally conducted by DMK under chief minister leadership

ன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம். ஐந்தாவது வருடம் நினைவு தினத்தை அனுசரிக்கப்படும் நிலையில், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கு பெற்றுள்ளனர். 

இந்த அமைதி பேரணியில் ,அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று, கருப்பு சட்டை அணிந்து ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் சென்றுள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஓமந்தூரர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு மாலை சூடி மரியாதை செலுத்தினார்கள்.